தேசிய செய்திகள்

வெளிநாட்டு நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யுங்கள் மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கோரிக்கை

வெளிநாட்டு நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு நேரடியாக தடுப்பூசியை விநியோகிக்க மறுப்பு தெரிவிப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

18 - 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கு பல மாநிலங்கள் வெளிநாட்டு நிறுவனங்களை நாடி உள்ளன.

ஆனால், வெளிநாட்டு நிறுவனங்கள் மாநிலங்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை விநியோகம் செய்ய மறுத்துள்ளது. இந்தியாவின் மத்திய அரசிடம் மட்டுமே தடுப்பூசி தொடர்பாக எங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி வழங்க முடியும் என மாடர்னா, பைசர் போன்ற நிறுவனங்கள் கூறி வருகின்றன.

இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்களிடம் தடுப்பூசிகளை பெறுவது தொடர்பாக நாங்கள் பேசினோம்.

ஆனால், இரு நிறுவனங்களே எங்களிடம் தடுப்பூசிகளை விற்பனை செய்ய மறுத்துவிட்டன. இந்திய அரசிடம் மட்டுமே தங்கள் பரிவர்த்தனைகளை வைத்து கொள்வோம் என கூறிவிட்டன. தடுப்பூசிகளை வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் என்றார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை