பெங்களூரு,
கர்நாடக ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதிகளாக சிவசங்கர் அமரன்னவர், மக்கிமனே கணேசய்யா உமா, வேதவாச்சார் ஸ்ரீசானந்தா, சஞ்சீவ்குமார், பத்மராஜ் நேமச்சந்திர தேசாய், பஞ்சிகட்டே கிருஷ்ணபட், இந்திரகுமார் அருண், சீதாராமய்யா இந்திரேஷ், ரவி ஹொங்கப்பா ஒசமணி, சவனூர் விஷ்வஜித் ஷெட்டி ஆகிய 10 பேர் பணியாற்றி வந்தனர். இந்த 10 கூடுதல் நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து 10 பேரும் கர்நாடக ஐகோர்ட்டின் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் அந்த 10 கூடுதல் நீதிபதிகளும் நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பொறுப்பு தலைமை நீதிபதி சதீஸ்சந்திர சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.