தேசிய செய்திகள்

நிலவை நெருங்குகிறது சந்திரயான் 3 விண்கலம் - சுற்றுவட்ட பாதையின் உயரம் 3-வது முறையாக குறைப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் உயரம் 3-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.

வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையின் தூரம் 3-வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 5-ந் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வரும் நிலையில் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை 150* 177 கி.மீ என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவு வட்டப் பாதையில் விண்கலம் சுற்றி வருகிறது.

சந்திரயான் 3 விண்கலம் 30 நாட்களை கடந்து நிலவை நோக்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறது. ஆகஸ்ட் 23-ந் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்