தேசிய செய்திகள்

20 இந்தோ-திபெத்திய படையினருக்கு வீர தீர போலீஸ் பதக்கம்

லடாக்கில் சீன ராணுவத்துடன் துணிச்சலாக மோதிய 20 இந்தோ-திபெத்திய படையினருக்கு வீர தீர போலீஸ் பதக்கத்தை மத்திய மந்திரி நித்யானந்த் ராய் வழங்கினார்.

20 பேருக்கு பதக்கம்

மத்திய படையான இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ், கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் ராணுவத்துக்கு தோளோடு தோளாக இப்படையினர் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி இரவு, எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் பலியானார்கள். கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில், கிழக்கு லடாக் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு உதவியாக இந்தோ-திபெத்திய எல்லை போலீசார் சீன படைகளுடன் மோதினர். இதில், மிக தீரத்துடன் போராடிய 20 போலீசாருக்கு வீர தீர போலீஸ் பதக்கம் வழங்கப்படுவதாக கடந்த ஆகஸ்டு 14-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

மத்திய மந்திரி

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையின் 60-வது ஆண்டு விழாவையொட்டி, டெல்லி அருகே உள்ள நொய்டாவில் நேற்று இவர்களுக்கு இந்த பதக்கங்கள் வழங்கப்பட்டன.மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், 20 வீரர்களின் சீருடையில் பதக்கங்களை அணிவித்ததுடன், சான்றிதழ்களை வழங்கினர்.

பதக்கம் பெற்ற 20 பேரில், 8 பேர் கடந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன படைகளுடன் மோதியவர்கள். 6 பேர் கடந்த ஆண்டு மே 18-ந் தேதி, 4-வது பிங்கர் பகுதியில் மோதியவர்கள். மீதி 6 பேர், அதே நாளில் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் போரிட்டவர்கள் ஆவர்.

18 மணி நேர சண்டை

மிகவும் மோசமான வானிலையில், காயங்களையும் பொருட்படுத்தாமல், சீன ராணுவத்தின் முன்னேற்றத்தை இவர்கள் தடுத்து நிறுத்தியதாகவும், 18 மணி நேரம் கூட சண்டையிட்டதாகவும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சத்தீஷ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையில் சிறப்பாக செயல்பட்ட 3 இந்தோ-திபெத்திய எல்லை போலீசாருக்கும் வீர தீர போலீஸ் பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்