தேசிய செய்திகள்

நீங்கள் கன்னி கழியாதவரா? மருத்துவ கல்லூரியின் பணியாளர் நியமன படிவத்தில் வினோத கேள்வியால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி

நீங்கள் கன்னி கழியாதவரா? என பீகார் மருத்துவ கல்லூரியின் பணியாளர் நியமன படிவத்தில் வினோத கேள்வியால் விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லூரி உள்ளது. இந்நிலையில் இந்த கல்லூரிக்கான பணியாளர் நியமனத்துக்கான உறுதி மொழி படிவத்தில் விண்ணப்பதாரர் திருமண விவரங்கள் குறித்து கேட்கபட்டுள்ளது. அதில் உறுதிமொழி படிவத்தில் ஒரு வினோதமான கேள்வி கேட்கப்பட்டிருந்தது விண்ணப்பதாரார்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த விண்ணப்பதாரர் படிவத்தில் திருமணமானவரா அல்லது கணவர், மனைவியை இழந்தவரா அல்லது கன்னி கழியாதவரா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி ஆங்கிலத்தில் சிங்கிள் என்ற அச்சிடுவதற்கு பதிலாக விர்ஜின் என அச்சிட்டுள்ளன.

இது தொடர்பாக அக்கல்விநிறுவனத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் மனீஷ் மண்டல் கூறுகையில்,

எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தின் விதிகளைத்தான் நாங்களும் பின்பற்றி வருகிறோம். அவர்களது விண்ணப்பத்திலும் இது மாதிரி தான் உள்ளது. அரசு விதிமுறைகள், அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளபடிதான் இந்த வார்த்தைகள் உள்ளன. அவர்கள் மாற்றினால் நாங்களும் விண்ணப்பத்தில் மாற்றம் செய்வோம் என அவர் கூறினார்.

இதுபோன்ற வினோத கேள்வியால் சமூகதளவாசிகள் சமூகவலைதளத்தில் கிண்டலாக பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் கன்னி கழியாதவர்களுக்கென்று சிறப்பு இடஒதுக்கீடு ஏதேனும் இருக்கா என்று விமர்சித்துள்ளனர்.