தேசிய செய்திகள்

ஆயுத படை மூத்தவீரர்கள் தினம்: தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி மரியாதை

ஆயுத படைகளின் மூத்தவீரர்கள் தினத்தில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதி மரியாதை செலுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் ஆயுத படைகளின் மூத்தவீரர்கள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, முப்படைகளிலும் பணியாற்றி நாட்டுக்கு சேவை செய்து, வாழ்ந்து கொண்டிருக்கும் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களது தேச பணி பாராட்டுக்கு உரியது என்று அங்கீகரிக்கும் வகையிலும் இந்த தினம் அமைந்துள்ளது.

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் முப்படைகளின் தலைமை தளபதியான ஜெனரல் அனில் சவுகான் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உள்ளார்.

இதேபோன்று, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, விமான படை தலைமை தளபதி வி.ஆர். சவுத்ரி மற்றும் கடற்படை தலைமை தளபதி ஆர். ஹரி குமார் ஆகியோரும் தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு