தேசிய செய்திகள்

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளை

நகைக்கடைக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் 25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

தினத்தந்தி

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜன்சாத் நகரில் பப்லு சைனி என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு 2 மோட்டார் சைக்கிள்களில் திடீரென அங்கு வந்த 4 பேர் பப்லு சைனியை துப்பாக்கி முனையில் மிரட்டி கடையில் இருந்த நகைகளை எல்லாம் அள்ளினர். பின்னர் தங்கம், வெள்ளி என சுமார் 25 கிலோ நகைகளை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த அந்த நகரில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த துணிகர சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு