தேசிய செய்திகள்

லடாக்கில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ வீரர் கைது

இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில், அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர், இந்திய ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

புதுடெல்லி:

கடந்த ஆண்டு இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவான பிறகு, இருநாட்டு எல்லைப் பகுதியிலும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ஜனவரி 8-ம் தேதி அதிகாலை, இந்திய - சீன எல்லையான லடாக் பகுதிக்கு அருகே தெற்கு பாங்காங் ஏரி பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததால், சீன ராணுவ வீரர், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த இந்திய ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் சீன வீரர், உரிய விதிமுறைகளின்படி நடத்தப்படுவார் என்றும், அவர் எல்லைத்தாண்டி வந்தது குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு