புதுடெல்லி,
இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவனே 3 நாள் பயணமாக (டிசம்பர் 28 முதல் 30 வரை) தென்கொரியாவுக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளதாக இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, தென் கொரிய ராணுவ தலைமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் பொதுமக்கள் தலைமையையும் அங்கு சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு பயணம் மேற்கொண்டு, இந்தியா- சவுதி இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விஷயங்களை பரிமாறிக்கொண்டார்.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு சென்ற முதல் இந்திய ராணுவ தலைமை தளபதி என்ற முறையில் நரவனேயின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.