image tweeted by @ adgpi 
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்ட ராணுவ தலைமை தளபதி

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்.

தினத்தந்தி

ஜம்மு காஷ்மீர்,

காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, இன்று எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் எல்லையில் உள்ள பகுதிகளை பார்வையிட்டார்.

அவரது இந்த பயணத்தின் போது, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து உள்ளூர் தளபதிகளால் அவருக்கு விளக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம், முகாம்கள், எதிர் ஊடுருவல் கட்டம், விழிப்புநிலை மற்றும் எல்லைப் பகுதிகளில் ராணுவம்-குடிமக்களின் இணக்கம் ஆகியவை குறித்து தளபதிகள் தலைமை தளபதிக்கு எடுத்துக்கூறினர்.

அப்போது தலைமை தளபதி, ராணுவ வீரர்களிடையே உரையாடும் போது, எல்லைப்பகுதிகளில் விழிப்புடன் இருக்க வேண்டும், என்றும், கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்தைப் பேணுவதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், ராணுவத்தினரின் மன உறுதி மற்றும் திறமைக்காக அவர்களை பாராட்டினார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்