ஜம்மு காஷ்மீர்,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி பகுதியில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். பொதுமக்கள் ஒருவர் உயிரிழந்தாக கூறப்படுகிறது.