ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் மகேஸ்வர் பகுதியில் நரேஷ் யாதவ் என்ற ராணுவ வீரர் துப்பாக்கி குண்டடிபட்டு கிடந்துள்ளார்.
அவரது உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் பணியில் பயன்படுத்துவதற்காக வைத்து இருந்த கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிய வந்துள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.