தேசிய செய்திகள்

பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் காயம் அடைந்த ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தர். #CeasefireViolation

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த 17 ஆம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இந்திய ராணுவத்தைசேர்ந்த ஹவில்தார் சரன் ஜித்சிங் (வயது 42) காயம் அடைந்தார். காயம் அடைந்த சரன் ஜித்சிங் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராணுவ வீரர் உயிரிழந்தார். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் இந்த ஆண்டு மட்டும் எல்லையில் 650 முறை அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய தாக்குதலால் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்தனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு