தேசிய செய்திகள்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் மரணம்

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் காயம் அடைந்த இந்திய ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜம்மு,

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா மற்றும் அக்னூர் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய கண்காணிப்பு நிலைகளின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. எனினும் இந்த மோதலில், 3 இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் உத்தம்பூர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நாயக் சுபாஷ் தாப்பா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்