புதுடெல்லி,
மணிப்பூரில் போலி என்கவுன்டர் நடத்தியதாக ராணுவ மேஜர் விஜய்சிங் பல்ஹாரியா மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.
மணிப்பூரில் கடந்த 2009-ம் ஆண்டு ஆசாத்கான் (12) என்ற சிறுவனை ராணுவத்தினர் கைது செய்து பயங்கரவாதி என குற்றம்சாட்டி சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் நியமித்த விசாரணை கமிஷன் மூலம் ராணுவத்தினர் நடத்தியது போலி என்கவுன்டர் என தெரியவந்தது. இதையடுத்து ராணுவ மேஜர் விஜய்சிங் பல்ஹாரியா மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்துள்ளது.