இந்த நிலையில், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் ரெயில் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
அவர்களுடன் மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் உடன் சென்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் சாலை ரெயில் நிலையம் மற்றும் 2 புறநகர் ரெயில் நிலையங்களில் புதிய நடைமேம்பாலங்கள் கட்டுவதற்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளோம்.
வருகிற ஜனவரி 31ந்தேதிக்குள் இவை கட்டி முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.