தேசிய செய்திகள்

மூட்டு அளவு பனியில் நடந்து கண்காணிப்பை மேற்கொள்ளும் இந்திய ராணுவ வீரர்கள்..!

சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் நடக்க இயலாத அளவுக்கு கடும் பனியிலும் இந்திய ராணுவ வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

சாமோளி(உத்தரகாண்ட்),

உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு உள்ளது. சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக எப்போதும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சீன எல்லையோர பகுதிகளில் இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வீரர்கள் பனியில் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மூட்டு அளவுக்கு பனி தேங்கியுள்ளதால் ரோந்து செல்வது சிரமமாகி உள்ளது. ஆனாலும் தடைகளை பொருட்படுத்தாமல் பனியில் உலவுவதற்காக கட்டை பொருத்திய காலணியை அணிந்து கொண்டு ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து, ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,

காலணிகள் அணிந்து கொள்வதால் அதிக தூரத்தையும் பகுதிகளையும் கண்காணிக்க முடிகிறது.மேலும் வேகமாக நடந்து செல்ல உதவிகரமாக உள்ளது.

இதற்காக ராணுவ வீரர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு