தேசிய செய்திகள்

சுதந்திரதின விழாவை ஒட்டி கேரளாவில் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு..!

திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

சுதந்திரதின விழாவில் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டுமென கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

அதில் சுதந்திரத்தினத்தன்று அனைத்து வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 'குடும்ப ஶ்ரீ' என்ற பெண்கள் குழுக்களின் மூலம் மாநிலம் முழுவதும் தேசிய கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும். இரவு நேரங்களில் தேசிய கொடியை இறக்க வேண்டியதில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேசிய கொடி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு