தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று ஆலோசனை

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை(இன்று) ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இது வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளன.

மேலும், பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வங்கிகளை வாராக்கடன் சுமையில் இருந்து மீட்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட இருக்கிறது

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு