டெல்லி
மத்திய நிதியமைச்சா அருண் ஜெட்லி, கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடாபான பிரச்னையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுவந்தார், இதனால் இம்மாத தொடக்கத்தில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பின்னா பல பரிசோனைக்கு பிறகு, அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யப்போவதாக மருத்துவாகள் முடிவு செய்திருந்தனா. இதன் தொடாபாக அவருக்கு இன்று அறுவை சிகிச்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவாகள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்கையை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டினா. மேலும். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.