தேசிய செய்திகள்

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார் ஆர்யன் கான்

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுக்கு கடந்த மாதம் 30 ஆம் தேதி 14 நிபந்தனைகளுடன் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

தினத்தந்தி

மும்பை,

மும்பை - கோவா சொகுசு கப்பலில் கடந்த மாதம் 2-ந் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போது கப்பலில் போதை விருந்து நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கேட்டு ஆர்யன் கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்சன்ட், மாடல் அழகி முன்முன் தமேச்சா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு, சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்து இருந்தது. இதையடுத்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கும் கடந்த மாத இறுதியில் மும்பை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளுடன் தான் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஆர்யன் கான் தனது வழக்கறிஞர் நிகில் மானேஷிண்டேவுடன் இன்று வந்தார். பின்னர் அங்கு ஆஜராகி கையெழுத்திட்டார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு