தேசிய செய்திகள்

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டி: ஓவைசி அறிவிப்பு

உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் உத்தர பிரதேச தேர்தல் களம் தற்போதே மெல்ல மெல்ல சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரான அசாதுதின் ஓவைசி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியுடன் இணைந்து பகுஜன் சமாஜ் கட்சி தோதலைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை இரு கட்சிகளுமே மறுத்து செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்