தேசிய செய்திகள்

‘மிஷன் சக்தி’ : கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டது - டிஆர்டிஓ

‘மிஷன் சக்தி’ திட்டத்திற்கு கடந்த 6 மாதங்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டது என டிஆர்டிஓ தலைவர் கூறியுள்ளார்.

விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் 'மிஷன் சக்தி' எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்தது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சிக் கழகத்தின் (டிஆர்டிஓ) தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி பேசுகையில், மிஷன் சக்தி திட்டத்திற்கு கடந்த 6 மாதங்களாக பணிகள் துரிதப்படுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் விதமான ஏவுகணைகளை தயாரிக்க சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 6 மாதங்களாக இதன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டது. இதற்காக 100 விஞ்ஞானிகள் இரவு-பகலாக உழைத்தனர். ஏ-சாட் ஏவுகணை பிருத்வி வகை ஏவுகணைக்கு முற்றிலும் வேறுபட்டது. சோதனை முயற்சியின்போது 300 கி.மீ. தொலை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் அழிக்க முடியும். இந்தியா மிகவும் பொறுப்புணர்வு கொண்டது.

எனவே, சோதனை தாக்குதலால் ஏற்படும் கழிவுகள் விரைவில் மறையும் விதமாக இலக்கு 300 கிலோ மீட்டருக்குள் நிர்ணயிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்