தேசிய செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி: இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி மறுப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 3 இந்திய வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை தொடங்குகின்றன. ஆனால் துவக்க விழா நடைபெறுவதற்கு முன்னதாகவே கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் தொடங்கி விட்டது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 3 வீராங்கனைகளுக்கு சீனா அனுமதி மறுத்துள்ளது. 3 வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி மறுத்ததற்காக சீனாவிற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கையால் ஆசிய விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கவிருந்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூரின் சீன பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், வீராங்கனைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்