லவ்லினா,மோடி  
தேசிய செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி: மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற லவ்லினா : பிரதமர் மோடி வாழ்த்து

லவ்லினா போர்கோஹைனிடமிருந்து ஒரு மிகச் சிறந்த செயல்திறன் வெளிப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் 5-0 என்ற கணக்கில் எதிராளியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள லவ்லினாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது சமூக ஊடகமான 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"லவ்லினா போர்கோஹைனிடமிருந்து ஒரு மிக சிறந்த செயல்திறன் வெளிப்பட்டுள்ளது!

வாழ்த்துகள்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில், இறுதிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று தங்கம் வென்ற லவ்லினாவுக்கு வாழ்த்துகள். அவரது விளையாட்டுப் பயணம், குறிப்பிடத்தக்க உறுதியையும் சிறப்பையும் பிரதிபலிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT