தேசிய செய்திகள்

சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் அணி புதிய மனு

சசிகலா நியமனம் செல்லாது என அறிவிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில், பன்னீர்செல்வம் அணி புதிய மனு ஒன்றை தாக்க செய்து உள்ளனர்.

புதுடெல்லி

முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நேற்றுநடந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியை கட்டுப்படுத்தாது. டி.டி.வி தினகரனால் கட்சியின் எந்த பதவியையும் வகிக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இதை தொடர்ந்து இன்று டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணயத்திடம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். நேற்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் நகலையும், பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கூறியதாவது:-

தினகரன் துணை பொதுச்செயலாளராக பதவி வகிக்க இயலாது என்ற தீர்மானத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம் என கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...