கவுகாத்தி,
அசாமில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த மாத தொடக்கத்தில் இருந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.
அதன்படி, அசாமில் இன்று மேலும் 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 40 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 861 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 65 லட்சத்து 17 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் தாக்குதலுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 197 ஆக அதிகரித்துள்ளது.