கவுகாத்தி,
அசாமில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கோலாகட் மற்றும் லகிம்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (ஜூலை 28ந்தேதி) காலை 5 மணி முதல் அடுத்த உத்தரவு வரும்வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதேபோன்று அனைத்து கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் பொது மற்றும் தனியார் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.