தேசிய செய்திகள்

அசாம் வெள்ளம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : 42 லட்சம் பேர் பாதிப்பு

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

வெள்ளத்தால் 33 மாவட்டங்களில் மொத்தம் 42 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பல பகுதிகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீண்டும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.அசாமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி