கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், லெகின்ஸ் அணியத் தடை - அசாம் மாநில அரசு உத்தரவு

தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஆடைக் கட்டுப்பாடு விதித்து அசாம் அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் திஸ்பூரில் உள்ள மாநில செயலக வளாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அசாம் அரசு ஆடைக் கட்டுப்பாடு வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பான அலுவலக உத்தரவின்படி, செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதன்படி ஆண்கள் இனி சட்டை மற்றும் பேண்ட் அணிய வேண்டும் என்றும் பெண்கள் புடவை மற்றும் சல்வார்-கமீஸ் அணியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்மாநில சட்டமன்ற சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரியின் உத்தரவின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி தினசரி ஊதியம் மற்றும் நிலையான ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் மாநில சட்டசபை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஊழியர்களுக்கு சீருடையும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டசபை நடவடிக்கைகளை பதிவு செய்யும் ஊடகவியலாளர்களும் இனி அரசாங்க வழிகாட்டுதல்படிதான் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்