தேசிய செய்திகள்

சக ஆசிரியர்களை மிரட்ட பட்டாக்கத்தியுடன் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

அசாம் மாநிலத்தில் ஒரு தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பட்டாக்கத்தியுடன் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திரிதிமேதா தாஸ் (வயது 38) என்ற அந்த ஆசிரியர் சில்சார் மாவட்டம் தாராப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். 11 ஆண்டுகளாக அந்த பள்ளியில் வேலை பார்த்து வரும் அவர் கோபத்தில் கத்தியுடன் வந்ததைப் பார்த்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து தலைமை ஆசிரியரை பிடித்து விசாரித்தனர். மற்ற ஆசிரியர்களின் முறைகேடுகளால் கோபம் மற்றும் விரக்தி அடைந்ததாகவும், கத்தியைக் காட்டி அவர்களை எச்சரிக்க முயன்றதாகவும் தலைமை ஆசிரியர் கூறியிருக்கிறார்.

மேலும், அவர் கைவசம் இருந்து சில குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அதில் தனக்கு சில ஆசிரியர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், 3ஆசிரியர்களை தான் கொலை செய்யப் போவதாகவும் எழுதப்பட்டிருந்தது.

ஆசிரியர் பட்டாக்கத்தியுடன் வந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு