கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது

அசாமில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் இந்திய அல்கொய்தா, அன்சருல் பங்களா டீம் ஆகிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மியா பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் மொகர் அலி, பொதுச்செயலாளர் அப்துல் படேன் ஷேக், தனு தாடுமியா ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கோல்பாரா மாவட்டத்தில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு வீட்டில், 'மியா மியூசியம்' என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கண்காட்சியை அவர்கள் அமைத்திருந்தனர். அந்த கண்காட்சிக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் கைது செய்யப்பட்ட அவர்கள் நல்பாரிக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது