தேசிய செய்திகள்

அசாமில் வன்முறை ; ரூ.1000 கோடி இழப்பு என அரசு தகவல்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால், ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணித்திருப்பதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

கவுகாத்தி,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக அசாம் மாநிலத்தில்தான் முதலில் போராட்டம் வெடித்தது. பஸ் எரிப்பு, ரெயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்களும் நடந்தன.

அசாம் சுற்றுலா வளர்ச்சி கழக தலைவர் ஜெயந்தா மல்லா பருவா இன்று கவுகாத்தியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வன்முறை போராட்டங்களால், சுற்றுலா துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வரவில்லை. அசாமுக்கு செல்ல வேண்டாம் என்று வெளிநாடுகள் அறிவுறுத்தியதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வரவில்லை.

எனவே, டிசம்பர், ஜனவரி ஆகிய 2 மாதங்களிலும் தலா ரூ.500 கோடி வீதம் மொத்தம் ரூ.1,000 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணித்துள்ளோம் என்றார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்