தேசிய செய்திகள்

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும்: அசாம் முதல்-மந்திரி வலியுறுத்தல்

ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அசாம் முதல்-மந்திரி சர்பானாந்த சோனாவால் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

திஸ்பூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த சூழலில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படும். அந்த ஊரடங்கில் புதிய வழிமுறைகள் பின்பற்றப்படும் என்றும், அதுகுறித்து வருகிற 18-ந் தேதிக்கு முன் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அசாம் முதல்-மந்திரி சர்பானாந்த சேனாவால் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். எனினும் மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்று செயல்படுத்துவோம் எனக் கூறினார்.

அசாம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை