தேசிய செய்திகள்

அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்; பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இருந்து முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி நாளை மதியம் 12 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இதுபற்றி அரசு வெளியிட்ட குறிப்பில், இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் அந்த பகுதி மக்கள் விரைவாகவும், வசதியாகவும் பயணம் மேற்கொள்வார்கள். தவிர, சுற்றுலாவும் ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கின்றது.

இந்த ரெயில், அசாமின் கவுகாத்தி நகரையும், மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பைகுதிரி நகரையும் இணைக்கும். இதனால், ஒரு மணிநேரம் வரை மக்களின் பயண நேரம் மிச்சப்படும். தற்போது மிக விரைவாக செல்ல கூடிய ரெயிலானது இந்த தொலைவை கடக்க 6.30 மணிநேரம் எடுத்து கொள்கிறது.

இதே பயண தொலைவை வந்தே பாரத் எஸ்பிரஸ் ரெயிலானது 5.30 மணிநேரத்தில் கடந்து செல்லும் என அரசு அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 182 கி.மீ. தொலைவுக்கான புதிய மின்மய பிரிவையும் நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்க இருக்கிறார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்