தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்: 4ம் தேதி தேர்தல் ஆணையம் ஆலோசனை

5 மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

தினத்தந்தி

டெல்லி,

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், உள்துறை செயலாளர்கள் பங்கேற்க தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்