தேசிய செய்திகள்

குளிர் பிரதேசமான இமாச்சலில் மீண்டும் புதிய உச்சத்தை தொட்ட வெப்பநிலை

தர்மசாலாவில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசாக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சிம்லா,

குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசத்தில் வெப்ப அலை இன்னும் குறையவில்லை. நேற்றும் பல பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது. குறிப்பாக தர்மசாலாவில் வெப்பநிலை 37.7 டிகிரி செல்சியசாக பதிவாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தர்மசாலாவில் கடந்த ஜூன் 1995 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 38.6 டிகிரி ஆகும். இதற்கு பிறகு நேற்றைய தினம் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மாநிலத்திலேயே அதிக வெப்பம் 44.3 டிகிரி செல்சியசாக உனாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இருந்தது, அதைத் தொடர்ந்து பிலாஸ்பூர் நகரம் 41.5 டிகிரியாக இருந்தது.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக, தர்மசாலாவில் வெப்பநிலை 37 டிகிரியைத் தாண்டியது கிடையாது. ஆனால், தற்போது ஜூன் 4 முதல், வெப்பநிலை 37 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...