தேசிய செய்திகள்

ஆண்டர்சன்பேட்டையில்சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்

ஆண்டர்சன்பேட்டையில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் டிரைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினத்தந்தி

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயலில் ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. இதில் ராபர்ட்சன்பேட்டையில் பிரிட்சர்டு ரோடு மற்றும் 4-வது பிளாக் பகுதிகளில் வாடகை கார்களை நிறுத்தவும், கோர்ட்டு வளாகம் அருக சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்தவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்த இடவசதி இல்லை என தெரிகிறது. இதனால் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி வருகிறார்கள்.

இதன்காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சரக்கு வாகன டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதமும் விதித்து வருகிறார்கள். இதன்காரணமாக டிரைவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

இதனால் சரக்கு வாகன டிரைவர்கள், வாகன நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நகரசபை தலைவராக இருந்த வள்ளல் முனிசாமி, இடம் ஒதுக்கி கொடுப்பதாக உறுதி அளித்தார்.

ஆனால் இதுவரை இடம் ஒதுக்கப்படவில்லை. இந்த நிலையில் ஆண்டர்சன்பேட்டயில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களை நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும் என்று தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதாடம் டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்