தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பஸ்-லாரி மோதல்; 12 பேர் பலி

உத்தரபிரதேச மாநிலம் பரபங்கி மாவட்டம், பாபுரி கிராமத்தில் நேற்று ஒரு தனியார் பஸ், லாரியுடன் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது.

தினத்தந்தி

அந்த பஸ் டெல்லியின் பக்ரியாச் என்ற இடத்தில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தது. காலை 4.45 மணி அளவில், பாபுரி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையில் நின்றிருந்த மாடுகள் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை திருப்பியபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் பலத்த காயம் அடைந்து அலறி துடித்தனர்.

விபத்தில் 12 பயணிகள் இறந்தது தெரியவந்தது. மேலும் 32 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து