தேசிய செய்திகள்

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு புதுச்சேரியிலும் அதிகரித்து வருகிறது. இதுபற்றி புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்பநல சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ள தகவலின்படி, கொரோனா பரிசோதனையில் 52 புதிய பாதிப்புகள் நேற்று உறுதி செய்யப்பட்டன. இதனால், புதுச்சேரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 338 ஆக உயர்ந்து இருந்தது. 131 பேர் குணமடைந்தும், 200 பேர் தொடர் சிகிச்சையிலும் இருந்தனர். புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 7 ஆக இருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் கிருமம்பாக்கம் கிராமத்தில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்து உள்ளார். இதனால், புதுச்சேரியில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுவரை பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை முடிந்து 140 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர். 218 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 209 பேர் புதுச்சேரியிலும், 8 பேர் காரைக்காலிலும் மற்றும் ஒருவர் ஏனாமிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு