தேசிய செய்திகள்

மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பையால் பரபரப்பு

கர்நாடக மாநிலம், மங்களூர் விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

மங்களூர்,

கர்நாடக மாநிலம், மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் மர்ம பை ஒன்று இருந்தது. இதுகுறித்து, பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், பையை சேதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. பையை மீட்டு, வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து, வாகனத்தை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி உள்ளனர்.

அந்த பகுதியில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், மர்ம பை தெடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள மற்ற விமான நிலையங்களும், பாதுகாப்பு வளையத்திற்கு கெண்டு வரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை