தேசிய செய்திகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ.75 கோடி சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஜைன மத துறவியானார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மத துறவி ஆகி உள்ளார்.

தினத்தந்தி

மும்பை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா. அந்நிறுவனத்தில் திட்டப் பிரிவு துணைத் தலைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார்.

கடந்த 25-ம் தேதி வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்ற இவருடன் மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டுள்ளார். ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் 75 கோடி ரூபாயாகும்.

கெமிக்கல் இன்ஜினீயரிங்கில் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம்பெற்றவர். ஐஐடி மும்பையில் பட்டம் பெற்று உள்ளார்.இவரது இளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது 24 வது வயதில் ஜைன துறவியானது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?