திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர், திருமலைக்கு சென்று தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி, ஸ்ரீவாரி புஷ்கரணியில் புனித நீராடி, ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்கிறார்கள்.
பின்னர் காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடியை தரம் பிரித்து, அதற்கு விலையை நிர்ணயம் செய்து, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது.
அதன்படி இ.டெண்டர் மூலம் காணிக்கை தலைமுடி ஏலம் விடப்பட்டது. அதன்படி, ரூ.6 கோடியே 52 லட்சத்துக்கு பக்தர்களின் காணிக்கை தலைமுடி ஏலம் போனது.