தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.3 கோடியே 85 லட்சத்துக்கு ஏலம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.3 கோடியே 85 லட்சத்துக்கு ஏலம் போனது.

தினத்தந்தி

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வழிபடுவார்கள். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை தலைமுடியை சேகரித்து மூட்டைகளில் கட்டி வாகனங்களில் திருப்பதிக்கு அனுப்பி வைப்பார்கள்.

அங்கு தலைமுடியைச் சுத்தம் செய்து நீளம், நிறத்தின் அடிப்படையில் தரம் பிரித்து விலை நிர்ணயம் செய்து இ.டெண்டர் மூலம் ஏலம் விடுவார்கள். காணிக்கை தலைமுடி ஏலம் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நடக்கும்.

அதில் ஏராளமான வியாபாரிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான தலைமுடியை ஏலம் எடுப்பர். நேற்று முன்தினம் மொத்தம் 3 ஆயிரத்து 700 கிலோ தலைமுடி ஏலம் விடப்பட்டதில் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு வருமானமாக ரூ.3 கோடியே 85 லட்சம் கிடைத்ததாக இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை