தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்துள்ளது. #Vajpayee #RIPVajpayee

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் காலமானார். அவருடைய மறைவுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்து உள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவால் ஏற்பட்டுள்ள துயரத்தில் இந்தியாவுடன், அமெரிக்காவும் பங்கு கொள்கிறது. இருநாட்டு உறவுகள் வலுவடைவதற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்ததற்காக வாஜ்பாய் நினைவுகூரப்படுவார் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்தியாவின் இயற்கையான நட்பு நாடு அமெரிக்கா என்பதை அங்கீகரித்ததற்காக குறிப்பிடத்தக்க வகையில் வாஜ்பாய் நினைவில் கொள்ளப்படுவார் என்று கூறியுள்ள கென் ஜஸ்டர், அவரை இழந்து வாடும் இந்தியாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை