தேசிய செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் நள்ளிரவில் தீ விபத்து: ரூ.30 லட்சம் பணம் எரிந்து நாசம்

ஏ.டி.எம். மையத்தை கண்காணிப்பு கேமரா மூலம் மும்பையில் இருந்து கண்காணிக்கும் நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தது.

நகரி,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே வேப்பகுண்டா ராமாலயம் என்ற இடத்தில் உள்ள கட்டிடத்தில், ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.மும், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையமும் அடுத்தடுத்து இருந்தது. இதற்கிடையே திடீரென நள்ளிரவில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கண்காணிக்கும் நிறுவனம்

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் யாருக்கும் தகவல் தெரியவில்லை. ஏ.டி.எம். மையத்தை கண்காணிப்பு கேமரா மூலம் மும்பையில் இருந்து கண்காணிக்கும் நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் ஏ.டி.எம். மையம் முழுமையாக எரிந்து நாசமானது. இந்த விபத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.30 லட்சம் எரிந்து நாசமானதாக வங்கி அதிகாரி தெரிவித்தார்.