கோப்பு படம் 
தேசிய செய்திகள்

ரூ.24 லட்சம் பணத்துடன் ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து எடுத்து சென்ற திருடர்கள்

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தினத்தந்தி

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம், நாகவுர் மாவட்டம் ஜோதியாசி கிராமத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில், ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் அடியோடு பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டனர். அப்போது அந்த எந்திரத்தில் 24 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது.

இந்த திருட்டு பற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரும்பு சங்கிலி மூலம் ஏடிஎம் எந்திரத்தை பெயர்த்து, திறந்த ஜீப்பில் ஏற்றி சென்றிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு