தேசிய செய்திகள்

தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது: பிரவீண் தொகாடியா

காஷ்மீரில் தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வருவதில் மோடியின் அரசு தோல்வி அடைந்துள்ளது என விஷ்வ இந்து பரிஷத் கூறியுள்ளது.

தினத்தந்தி

இந்நிலையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா புதுடெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, மெஹ்பூபா தலைமையிலான ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசை கலைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முப்தியின் அரசு தீவிரவாதத்திற்கு ஆதரவானது என கூறியுள்ள அவர், காஷ்மீரை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் தீவிரவாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களை எதிர் கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணியுடன் முப்தி அரசு செயல்பட்டு வருகிறது.

தொடர்ந்து பேசிய தொகாடியா, பிரதமர் நரேந்திர மோடி ஒரு முழு நேர பாதுகாப்பு மந்திரியை நியமிக்க வேண்டும் என கூறினார். 125 கோடி இந்தியர்களில் திறமையான நபர அந்த பதவிக்கு வர வேண்டும் என கடுமையுடனும் அவர் கூறினார்.

தீவிரவாத தாக்குதலானது, இந்துக்கள் பாதுகாப்புடன் இல்லை என்பதனை நிரூபித்துள்ளது. அவர்கள் அமர்நாத்திற்கு பாதுகாப்புடன் யாத்திரை மேற்கொள்ள முடியவில்லை. தனது 3 வருட ஆட்சியில் மோடி அரசால் தீவிரவாதத்தினை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை என்பது இந்த தாக்குதலில் வெளிப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்