தேசிய செய்திகள்

உப்பள்ளியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய 20பேர் மீது வழக்கு

உப்பள்ளியில் போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய 20பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா அகடி கிராமத்தில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போல் போலீஸ்காரர்களான திம்மண்ணா மற்றும் மகான்தேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு 20 போ கொண்ட கும்பல் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனா.

அந்த கும்பலை 2 போலீஸ்காரர்களும் பிடிக்க முயன்றனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் போலீஸ்காரர்களான திம்மண்ணா மற்றும் மகான்தேசை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பள்ளி டவுன் இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து உப்பள்ளி போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து