தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

குடியுரிமை மசோதா மூலம் வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்புக்கு முயற்சி நடப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

குடியுரிமை மசோதா தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டம் தொடர்பான பத்திரிகை செய்தியையும் அவர் இணைத்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு மாநிலங்களில் இன அழிப்பு நடத்தும் மோடி-அமித் ஷா அரசின் முயற்சிதான், குடியுரிமை மசோதா. அது, வடகிழக்கு மாநிலங்கள் மீதும், அவர்களின் வாழ்க்கை முறை மீதும் நடத்தப்படும் குற்றவியல் தாக்குதல்.

வடகிழக்கு மாநில மக்களுக்கு உறுதுணையாக நான் இருப்பேன். அவர்களுக்கு சேவை செய்ய காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை